Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாஅட.. என்னா க்யூட்டா இருக்கு.. துபாயில் ஹோட்டல் ஊழியருடன் சில்லா சில்லா பாடலுக்கு நடனம் ஆடிய...

அட.. என்னா க்யூட்டா இருக்கு.. துபாயில் ஹோட்டல் ஊழியருடன் சில்லா சில்லா பாடலுக்கு நடனம் ஆடிய அஜித் – வீடியோ வைரல்

நடிகர் அஜித்குமார் ஒருபக்கம் சினிமாவில் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு படம் நடிக்க, மறுபக்கம் தன் வாழ்நாள் ஆசையான உலகம் சுற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார். தன் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்தும் வருகிறார்.

- Advertisement -

அண்மையில் ஒரு ஹோட்டல் ஊழியருடன் அவர் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அஜித்குமார் துபாயில் மகிழ் திருமேனி தலைமையில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

புத்தாண்டு விடுமுறையை ஒட்டி படப்பிபுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அஜித்குமாருடன் அவரது மனைவி ஷாலினி, இரு குழந்தைகள் அனைவரும் புத்தாண்டை ஒன்றாக துபாயிலோயே கொண்டாடினர். இரவு ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஹோட்டல் ஊழியர் ஒருவருடன் துணிவு படத்தின் ‘ சில்லா சில்லா ’ பாடலுக்கு ஒரு குட்டி நடனத்தைப் போட்டார்.

- Advertisement -

இந்த வீடியோ அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் கியூட்டாக இருப்பதாக ஷேர் செய்துள்ளனர். அஜித் பொதுவாகவே ஜாலியான நபர் தான். மங்காத்தா, பில்லா – 2 போன்ற படங்களின் மேக்கிங்கில் அவர் படகுழுவினருடன் ஜாலியாக இருக்கும் காட்சிகளைப் பார்த்தாலே தெரியும்.

- Advertisement -

அண்மையில் துபாயில் அஜித் எடுத்த பல்வேறு புகைப்படங்கள் வெளியாகின. படகில் சென்ற அவரைக் கண்ட ரசிகர்கள் ‘ தல தல ’ என அழைக்க, அஜித் தன் கையை அசைத்து டாட்டா காட்டினார். விடாமுயற்சி ஷூட்டிங் கிட்டத்தட்ட 40% பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் துவங்கிய படப்பிடிப்பு முழு வீச்சில் போய்க் கொண்டிருக்கிறது.

கோடை கழித்து ஓரிரு மாதங்களில் திரைக்கு வரும் என கணிக்கப்படுகிறது. படத்தின் தலைப்பு தவிர இன்னும் வேறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த புத்தாண்டுக்கு ஃபர்ஸ்ட் லுக் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அடுத்து பொங்கல் திருநாளுக்காவது அப்டேட் வருமா என காத்திருக்கின்றனர்.

Most Popular