Wednesday, May 8, 2024
- Advertisement -
Homeசினிமா“ தீனிப் பொருட்கள், நோட் புத்தகங்கள் கொடுப்பது அரசியல் இல்லை ” தளபதி விஜய்யின் அரசியல்...

“ தீனிப் பொருட்கள், நோட் புத்தகங்கள் கொடுப்பது அரசியல் இல்லை ” தளபதி விஜய்யின் அரசியல் வருகையை கலாய்த்து தள்ளிய மன்சூர் அலி கான்.. !

கோலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவராக ரசிகர்கள் பலத்தின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜய் விரைவில் அடுத்த அவதாரத்தை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஓர் ஆண்டாக தன் கழகத்தின் மூலம் உதவிகளை நீட்டி வரும் இரு ஒரு மாதத்தில் அதிகாரபூர்வமாக கட்சியைத் துவங்கவுள்ளார்.

- Advertisement -

ஒரு ஆண்டாக மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக மாணவர்களுக்கு பரிசுகள், மழையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் என ஷூட்டிங்க்கு இடையேயும் தானே நேரில் சென்றார். இதற்கெல்லாம் அவர் நல்ல வரவேற்பையும் பெற்றார். பிற தினங்களில் தனது ரசிகர்கள் மூலம் தொடர்ந்து மக்களின் மனதில் நீடிக்க பல்வேறு பணிகளில் ஈடுபட்டது அவரது இயக்கம்.

இன்னும் ஒரு மாதத்தின் டெல்லியில் விஜய் மக்கள் கழகம் எனும் பெயரில் அவர் கட்சியைப் பதிவு செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்காக சினிமாவில் இருந்து சிறிய ஓய்வு பெறுவதாகவும் சொல்கின்றனர். தற்போது செய்துக் கொண்டிருக்கும் கோட் படத்திற்கு பிறகு தளபதி 69 படத்தில் மட்டும் நடிக்கவுள்ளார்.

- Advertisement -

விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பே அவரைக் கலாய்க்கத் துவங்கிவிட்டனர். விஜய்யுடன் லியோவில் இணைந்து நடித்த மன்சூர் அலி கான் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் கட்சி குறித்த கேள்விகளுக்கு நகைச்சுவையாகவும் மறுபக்கம் கேலி செய்யும் விதமாகவும் பதிலளித்துள்ளார்.

- Advertisement -

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி குறித்த சந்திப்பில் மன்சூர் அலி கானிடம் விஜய்யின் அரசியல் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்க்கு அவர், “ அவர் அரசியல் வருவதால் நான் என்ன எங்கவயாவது போய் பதிங்கக்கணுமா ? ” என்றார். அவருக்கு ஆதரவு அளிப்பீர்களா என்று பின்னர் கேள்வியை திருத்திக் கேட்டனர்.

அதற்க்கு அவர், “ அது நாளைக் கதை. அவர் இப்போது கோட் படத்தில் பிஸியாக உள்ளார். நான் 40 வருஷமா அரசியலில் இருக்கிறேன். அவர் வரார் இவர் வரார் என்பதெல்லாம் எனக்கு கவலை இல்லை. ” மேலும், “ நாங்கள் ஒன்னும் தீனிப் பொருட்கள், நோட் புத்தகங்கள் கொடுக்க அரசியல் வரவில்லை. ” என நேரடியாக விஜய் மக்கள் இயக்கத்தைக் கேலி செய்துள்ளார்.

Most Popular