Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் அரசியலுக்கு வந்துட்டாரு என்பதற்காக அவருக்கு ஓட்டு போட முடியாது.. என்ன செய்துவிட்டார்.. அரவிந்த் சாமி...

விஜய் அரசியலுக்கு வந்துட்டாரு என்பதற்காக அவருக்கு ஓட்டு போட முடியாது.. என்ன செய்துவிட்டார்.. அரவிந்த் சாமி அதிரடிப் பேச்சு வைரல்

பல மாதங்கள் நாம் எதிர்பார்த்த தளபதி விஜய்யின் அரசியல் நுழைவு நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. டெல்லியில் பிப்ரவரி 2ஆம் தேதி ‘ தமிழக வெற்றிக் கழகம் ’ எனும் பெயரில் கட்சியைப் பதிவு செய்துள்ளார். சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது இது போன்ற அவரின் தைரியமான முடிவு சற்று அதிர்ச்சியை தந்தாலும் பாராட்டுக்குறியது.

- Advertisement -

நேற்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மக்களுக்காக செய்யும் சேவையும் போது எந்த ஒரு இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக இனி படங்களில் நடிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

ஒப்பந்தம் செய்த படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியல் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் மற்றக் கட்சித் தொண்டர்கள் வேண்டுமென்றே இதனை கேலி செய்கின்றனர். அரசியல் என வந்துவிட்டால் இதெல்லாம் சாதாரணம்.

- Advertisement -

மறுபக்கம் சினிமாவில் இருந்து வந்தவர்களுக்கு என்ன அரசியல் தெரியும் என ஒரு சிலர் பேசுகிறார்கள். இதற்கு இணங்க நடிகர் அரவிந்த சாமி நடிகர்கள் அரசியலில் களமிறங்குவது குறித்துப் பேசிய பழைய வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அதில் ஸ்வே மிகச் சிறப்பாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அரவிந்த் சாமி குறிப்பிட்டுள்ளதாவது, “ நான் ரஜினி ரசிகன், கமல் ரசிகன், விஜய் பிடிக்கும் என்பதற்கா நான் ஓட்டுப் போடக்கூடாது. மற்றவர்கள் போட்டால் போடுவார்கள் அசால் நாம் போட மாட்டேன். தேர்தலில் நிற்கும் நடுவரின் நோக்கம், அதனால் நல்லது நடக்குமா என்பதை நான் நம்ப வேண்டும். ”

“ நீங்கள் ஒரு நல்ல நடிகராக இருக்கலாம். அதனால் உங்களுக்கு நல்ல திட்டங்களை வடிவமைக்க தெரியும் என்பதை நான் எப்படி நம்புவது ? ஒரு சிலருக்கு சினிமாவில் ஹீரோ காப்பாற்றும் காட்சிகளை உள்வாங்கி நிஜத்திலும் அப்படித் தான் இருக்கும் என நம்புகிறார்கள். ஒரு மாநிலத்தை ஆள நீங்கள் என்ன கற்றுக் கொள்கிறீர்கள் என்பது முக்கியம். ”

மேலும், “ ஒரு நடிகரால் நன்றாக ஆட்சி செய்ய முடியாது என நான் சொல்ல வரவில்லை. யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் ஆனால் அதற்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள், சுற்றி உள்ளவர்கள் என பலவற்றைக் காண வேண்டியுள்ளது. ” என மிகச் சரியாக அரவிந்த் சாமி பேசியுள்ளார்.

Most Popular