Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainment3 திருமணங்கள் செய்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.. முன்னாள் மனைவிகள் யார்?

3 திருமணங்கள் செய்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.. முன்னாள் மனைவிகள் யார்?

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்களில் உச்சத்தில் இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. சரத் குமார் நடித்த அரவிந்தன் படத்தின் மூலமாக 16 வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா, 25 ஆண்டுகளுக்கும் மேலாக 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது விஜய் நடித்து உருவாகி வரும் GOAT படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

அஜித்,  சூர்யா, தனுஷ், சிலம்பரசன், கார்த்தி, ஆர்யா, ஜீவா உள்ளிட்டோரின் வளர்ச்சியில் யுவன் சங்கர் ராஜா முக்கிய பங்காற்றியவர். பெரும்பாலும் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருக்கும் யுவன் சங்கர் ராஜா சில ஆண்டுகளுக்கு முன் சொந்த வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக 3வது திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யுவன் சங்கர் ராஜா முதல்முதலில் சுஜயா சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சுஜயா – யுவன் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சுஜயாவும் லண்டனை சேர்ந்த பாடகி தான். 2002ஆம் ஆண்டு முதல் இருவரும் பழகி வந்த நிலையில், சில மாதங்களிலேயே இருவரும் லண்டனில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் பெற்றோர் சம்மதத்துடன் 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது.

- Advertisement -

ஆனால் சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக கூறி, இருவரும் விவாவரத்து பெற்றனர். இதனையடுத்து 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷில்பா என்பவரை யுவன் சங்கர் ராஜா திருமணம் செய்து கொண்டார். திருப்பதி கோயிலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தனர். 

- Advertisement -

இதன்பின் தாயின் மறைவால் சோகத்தில் இருந்த யுவன் சங்கர் ராஜா, திடீரென இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். அப்துல் காலிக் என்று பெயர் மாற்றம் செய்து கொண்ட அவர், 2015ஆம் ஆண்டு ஜஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2016 பெண் குழந்தை பிறந்தது. இறுதியாக ஜஃப்ரூன் நிஷா வாயிலாக தனது வாழ்க்கை துணை யுவன் சங்கர் ராஜா கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular