Entertainment

நம்ம தளபதிக்கு பிடித்த உணவு.. ஜாலி மோடில் விஜய் கூறிய வார்த்தை.. மனைவி சங்கீதா சொன்ன சீக்ரெட் பழக்கம்..!

நடிகர் விஜய்யின் உணவுப்பழக்கம் குறித்து அவரது மனைவி சங்கீதா சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். கோலிவுட்டில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ விஜய். ரசிகர்களால் தளபதி என அன்பாக அழைக்கப்படும் விஜய், நடனம், நடிப்பு, நகைச்சுவை என அனைத்திலும் தனது அடையாளத்தை பதித்துள்ளார்.

நடிகர் விஜய் அண்மையில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலை வாரிக்குவித்தது. ஆனாலும் அடுத்து ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விஜய். இப்படியான சூழல் இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது விஜய் சென்னையில் கொஞ்சம் ஓய்வில் இருக்கிறார்.
ஓய்வை முடித்துவிட்டு சென்னையில் நடக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்கும் விஜய், க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் செல்லவிருக்கிறார்.

இந்த நிலையில் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் மனைவி சங்கீதாவுடன் பேசும் விஜய், சாப்பிடுவதற்கு ரெடியாகிறார். ஆனால் ஹாட்பாக்ஸில் இருப்பதை பார்த்த அவர், என்னமா எனக்கு தோசை சாப்பிடணும் போல இருக்கு என்கிறார்.

Advertisement

தோசை ரெடி பண்ணவா? என சங்கீதா கேட்க, இல்லை நானே தோசை சுடுகிறேன் என சொல்லி தோசை சுடுகிறார். மேலும் அந்த வீடியோவில் பேசும் சங்கீதா, “தோசைனா விரும்பி சாப்பிடுவார். பிரியாணினா நல்லா இறங்கும். நாளை மதிய உணவு பிரியாணி என சொன்னால் இன்று இரவில் இருந்தே அவரது வயிறு காலியாக இருக்கும்” என கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top