Sunday, September 15, 2024
- Advertisement -
HomeEntertainmentஜவான் ஆஸ்கர் செல்லும்… அடித்துக் கூறும் அட்லி… சுட்ட வடை போச்சுடா வாட் அ கருவாட்…

ஜவான் ஆஸ்கர் செல்லும்… அடித்துக் கூறும் அட்லி… சுட்ட வடை போச்சுடா வாட் அ கருவாட்…

நடிகர் ஷாருக்கானுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. கொரோனாவுக்கு பிறகு பாலிவுட் திரையுலகம் சரியான வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த வேளையில், அத்தனைக்கும் பதான் முடிவு கட்டியது. இதனைத் தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.

- Advertisement -

பிகில் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் பாலிவுட்டுக்கு போய் சேர்ந்தார் அட்லி. அங்கு கிங் கானாக இருக்கும் ஷாருக்கானுடன், அவர் இணைந்ததால் பரபரப்பாக பேசப்பட்டார். அது மட்டுமல்லாமல் இங்கிருந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோரையும் இந்தி திரையுலகிற்கு அவர் அழைத்து சென்றார்.

கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம், இந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய்க்கு மேல் ஜவான் வசூல் ஈட்டியதால், ஷாருக்கான் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினர். இது ஒரு பக்கம் இருக்க, ஜவான் திரைப்படம் என்னமோ தமிழில் வரவேற்பை பெறாமல் போனது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் அட்லி தான் என்று பலர் வசை பாடினர்.

- Advertisement -

பார்த்து பழகிய கதையை அவர் எடுத்திருந்தாலும், கத்தி, ஆரம்பம், சர்க்கார் என பல்வேறு திரைப்படங்களின் காட்சியை அப்படியே எடுத்து அவர் வைத்திருக்கிறார் என குற்றம் சாட்டினர். ரசிகர்களை எவ்வளவு கேவலமாக நினைத்து இருந்தால் அவர் எப்படிப்பட்ட காட்சிகளை எல்லாம் அப்படியே சுட்டு வைத்து, எழுத்து இயக்கம் அட்லி என்று எழுதுகிறார் என கேள்வியும் எழுப்பினர். ஆனால் இதையெல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாத அட்லி, அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்கு படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த அவர் கூறியதாவது, ஜவான் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது குறித்து ஷாருக்கான் இடம் நிச்சயம் பேசுவேன். ஷாருக்கானையும் விஜய்யும் வைத்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். இருவரும் அதற்கான ஸ்கிரிப்ட் எழுது என்று என்னிடம் கூறினர்.

நீ படத்திற்கான கதையை எழுதுகிறாய் என்றால் அதில் நான் நிச்சயம் இடம்பெறுவேன் என்று விஜய் என்னிடம் கூறினார். இதையே தான் ஷாருக்கான் என்னிடம் தெரிவித்தார். தற்போது இதற்கான பணியில் நான் தீவிரம் காட்டி வருகிறேன் என்று கூறி இருக்கிறார். இந்த பேச்சைக் கேட்டு பொங்கி எழும்ப ரசிகர்கள், எப்பா போதும்டா சாமி நீங்கள் சுட்ட வடை என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்

Most Popular