Friday, April 19, 2024
- Advertisement -
HomeEntertainmentவெறித்தனம்..! விஜய்யுடன் இணைகிறாரா விக்ரம்? லோகேஸ் கனகராஜ் சொன்ன பதில்!

வெறித்தனம்..! விஜய்யுடன் இணைகிறாரா விக்ரம்? லோகேஸ் கனகராஜ் சொன்ன பதில்!

- Advertisement -

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய்யும் லோகேஷ் கனகராஜூம் தளபதி 67 படத்திற்காக இணைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மைக்கேல் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனியார் கல்லூரி ஒன்று பங்கேற்றார். அப்போது தளபதி 67 திரைப்படத்திற்கு அப்டேட் எப்போது வரும் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பிப்ரவரி ஒன்று இரண்டு மூன்று ஆகிய தேதிகளில் அப்டேட் வரும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் அப்போது லோகேஷ் கனகராஜ் இடம் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்து. அது நிறைவேறாமல் போனது தற்போது தளபதி 67 படத்தில் நடிகர் விக்ரம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். இது உண்மையா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் நானும் இது போன்று நிறைய கேள்விப்படுகிறேன்.

- Advertisement -

ஆனால் எதுவும் இப்போது சொல்ல முடியாது. நான் இப்போது சொல்லிவிட்டால் உங்களுக்கு எந்த சப்ரைசும் இருக்காது. பிப்ரவரி 3ஆம் தேதி வரை கொஞ்சம் காத்திருங்கள். நிச்சயமாக உங்களுக்கு விடை கிடைக்கும் என்று லோகேஷ் கனகராஜ் கூறினார். இதை கேட்டதும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். இதனால் லோகேஷ் கனகராஜ் படத்தில் விக்ரம் இணைந்து இருப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

- Advertisement -

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வரலாம் என்பதையே லோகேஷ் கனகராஜ் கூறியதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ் அப்டேட் குறித்து நிறைய மீம்ஸ்கள் வருகிறது. அதனை என்னுடைய பட குழு ,என் தாய் தந்தை அனைவரும் எனக்கு அனுப்புவார்கள். அதை பார்த்து சிரித்து விடுவேன் என்றும் தளபதி 67 படம் நிச்சயம் ஆக்சன் நிறைந்த படமாக இருக்கும் என்றும் 100% இது என்னுடைய படமாக அமையும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Most Popular