Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentஎனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. அதிரடியாக அறிவித்த யுவன் சங்கர் ராஜா.. ஒப்பந்தத்தை பார்க்க...

எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. அதிரடியாக அறிவித்த யுவன் சங்கர் ராஜா.. ஒப்பந்தத்தை பார்க்க சொன்ன ஆர்கே சுரேஷ்.. உண்மை என்ன?

தம்பிக் கோட்டை, தர்மதுரை, சலீம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ஆர்கே சுரேஷ். அதேபோல் தாரை தப்பட்டை, மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, புலிக்குத்தி பாண்டி, விருமன், காடுவெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தும் உள்ளார். ஒரே மாதிரியான படங்களில் நடிப்பவர் என்பதால், இப்போது சொந்தமாக தயாரித்து சில படங்களை தயாரித்து வருகிறார்.

- Advertisement -

அதேபோல் ஜாதி வெறிக்கு ஆதரவான சில படங்களிலும் ஆர்கே சுரேஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆருத்ரா நிதி நிறுவன பிரச்சனையில் சிக்கிய ஆர்கே சுரேஷ், நீண்ட மாதங்களாக துபாயில் தலைமறைவாக இருந்தார். இதனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் சில வாரங்களுக்கு முன் சென்னை வந்து விசாரணைக்கு ஒத்துழைத்தார்.

இதன்பின் காடுவெட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பல்வேறு சர்ச்சைகள் குறித்து விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் ஆர்கே சுரேஷ் தயாரித்து இயக்குவதாக தென் மாவட்டம் என்ற தலைப்பிட்டு போஸ்டர் வெளியிடப்பட்டது. நாயகனாகவும் ஆர்கே சுரேஷ் தான் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

போஸ்டரில் இருந்த பெயரால் அதிர்ச்சியடைந்த யுவன் சங்கர் ராஜா, உடனடியாக விளக்கம் கொடுத்தார். ”தென் மாவட்டம்” படத்தில் இசையமைப்பாளராக நான் கமிட்டாகவில்லை. இதுதொடர்பாக என்னிடம் யாரும் தொடர்பு கொள்ளவும் இல்லை என்று பதிவிட்டார். இதன்பின் ஆர்கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்களுடன் இந்த படம் மட்டுமல்லாமல் லைவ் கான்சர்ட்டுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள்.

- Advertisement -

ஒப்பந்தத்தை சரி பார்க்கவும் யுவன் சங்கர் ராஜா சார் என்று பதில் அளித்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவுக்கு தெரியாமலேயே அவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது எப்படி என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் ஆர்கே சுரேஷ் மீது பல்வேறு சந்தேகங்களை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Most Popular