Monday, May 6, 2024
- Advertisement -
HomeEntertainmentஃபர்னிச்சரா விட்டுறுங்கடா.. 7ஜி ரெயின்போ காலணி நாயகி இவர் தான்.. செப். முதல் வாரத்தில் தொடங்கும்...

ஃபர்னிச்சரா விட்டுறுங்கடா.. 7ஜி ரெயின்போ காலணி நாயகி இவர் தான்.. செப். முதல் வாரத்தில் தொடங்கும் படப்பிடிப்பு!

கதிர், அனிதா.. தமிழ் சினிமா காதல்களில் அதிகமாக கொண்டாடப்பட்ட இரு கதாபாத்திரங்கள் இவர்கள் என்று சொல்லலாம். 7ஜி ரெயின்போ காலணி மூலம் இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி காட்டினார். படிப்பு வராத, தந்தையிடம் அடி வாங்கும் ஹூரோ, மறுபக்கம் நாயகியின் வரவால் குடும்ப பொறுப்பை ஏற்கும் ஹூரோ என்று கொஞ்சம் கொஞ்சமாக கதிரின் உலகையே அனிதா மாற்றுவாள்.

- Advertisement -

இறுதியில் அவர்கள் காதல் என்ன ஆனது என்பதை ஆத்மார்த்தமாக சொல்லி இருப்பார் செல்வராகவம். இதுமட்டுமல்லாமல் யுவன் சங்கர் ராஜாவின் ஒவ்வொரு பாடல்களும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பின்னணி இசையில் தொடங்கி, நா.முத்துக்குமாரின் வரிகள் வரை ஒவ்வொன்றும் பிரிந்துபோன காதலின் நினைவுகளாகவே உள்ளது.

இந்த நிலையில் செல்வராகவன் மீண்டும் 7ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. பலரும் செல்வராகவனுக்கு தேவையில்லாத வேலை, கிளாசிக் படத்தை அப்படியே விட்டுவிடலாம் என்று கோரிக்கையும் வைத்து வருகின்றனர். ஆனால் அதற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டார் செல்வராகவன்.

- Advertisement -

7ஜி ரெயின்போ காலணி இரண்டாம் பாகத்தின் நாயகனாக மீண்டும் ரவி கிருஷ்ணாவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இசையமைப்பாளராக மீண்டும் யுவன் சங்கர் ராஜா பணிகளை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் சோனியா அகர்வால் கதாபாத்திரத்திற்கு பதிலாக புதிய நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

தற்போது செல்வராகவன் சில படங்களில் நடித்து வருவதால், செப்டம்பர் மாதம் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் கிளாகிக் படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் சொதப்பிவிடுவாரோ என்ற ரசிகர்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.

Most Popular