Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஇந்தியன் 2ல் இணைந்த விக்ரம் கூட்டணி.. தைவானில் ஷங்கருடன் இருக்கும் காளிதாஸ் ஜெயராம்.. என்ன கேரக்டரா...

இந்தியன் 2ல் இணைந்த விக்ரம் கூட்டணி.. தைவானில் ஷங்கருடன் இருக்கும் காளிதாஸ் ஜெயராம்.. என்ன கேரக்டரா இருக்கும்?

உலகநாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

கோலிவுட் உலகில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் இந்தியன்-2. கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன்.

தமிழ் சினிமாவில் தனியிடம் பிடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படியே படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் விபத்து உள்ளிட்டவை காரணமாக படத்தை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

- Advertisement -

இந்தநிலையில், பல நாட்களுக்கு பின்னர் அதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

- Advertisement -

இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தியன்-2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் ஆம் தேதி படக்குழு இந்தியன் 2 படத்திற்காக தைவான் புறப்பட்டது.

இந்நிலையில் பிரபல நடிகர் ஜெயராம் அவர்களின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம், இந்தியன் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சங்கருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதையடுத்து இணையத்தில் வேகமாக அந்த புகைப்படம் வைரலானது மட்டுமல்லாமல் படத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிகக்வுள்ளாரா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

Most Popular