Tuesday, May 7, 2024
- Advertisement -
HomeEntertainmentலியோவுக்கு பின் குவியும் வாய்ப்புகள்.. பிரபுதேவாவுடன் கைகோர்த்த மலையாள நடிகை.. இயக்குநர் யாருனு கேட்டா ஷாக்...

லியோவுக்கு பின் குவியும் வாய்ப்புகள்.. பிரபுதேவாவுடன் கைகோர்த்த மலையாள நடிகை.. இயக்குநர் யாருனு கேட்டா ஷாக் ஆகிருவீங்க

நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா அண்மை காலங்களில் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் ராதே படத்தை இயக்கிய பின், முழுக்க முழுக்க நடிப்பு பக்கம் திரும்பியிருக்கிறார். குறிப்பாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தில் விஜய் சகோதனாக பிரபுதேவா நடித்து வருகிறார். 

- Advertisement -

அதேபோல் சமீப காலங்களில் பிரபுதேவா நடித்த படங்கள் தோல்வியடைந்து வருவதால், சோலோ ஹீரோவாக நடிக்க தயங்கினார். அதேபோல் இன்னொரு பக்கம் நடிகை மடோனா செபஸ்டியன் கவண் படத்திற்கு பின் தமிழ் சினிமா பக்கமே வரவில்லை. பெரும்பாலும் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தான் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் விஜய் சகோதரியாக மடோனா செபஸ்டியன் நடித்திருந்தார். பிளாஷ்பேக் காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும், விஜயுடன் மடோனா இணைந்து ஆடிய டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதேபோல் இவரை பிந்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

- Advertisement -

பின்னர் லியோ ரிலீஸ்-க்கு பின் ஏராளமான பட வாய்ப்புகள் வருவதாக மடோனா செபஸ்டியன் கூறியிருந்தார். அதன்படி அடுத்ததாக பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படத்தின் நாயகியாக மடோனா செபஸ்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

கடைசியாக சக்தி சிதம்பரம் இயக்கி சார்லி சாப்ளின் 2 படத்தின் பிரபுதேவா நடித்திருந்தார். அதன்பின் அவர் மீண்டும் பிரபுதேவாவை நாயகனாக வைத்து மீண்டும் காமெடி படமொன்றை இயக்கவுள்ளதாக தெரிய வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்றும் தெரிய வந்துள்ளது.

Most Popular