Tuesday, May 7, 2024
- Advertisement -
HomeEntertainmentரங்தே பசந்தி, பாக் மில்கா பாக் இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா.. மகாபாரத கதையில் கர்ணன் கதாபாத்திரமாம்.....

ரங்தே பசந்தி, பாக் மில்கா பாக் இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா.. மகாபாரத கதையில் கர்ணன் கதாபாத்திரமாம்.. புகைப்படத்தால் உற்சாகமான கோலிவுட்

சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்களின் அபரிவிதமான வெற்றியால் சூர்யா பான் இந்தியா ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறார். ஓடிடியில் வெளியானாலும், இந்தியா முழுவதும் இந்த இரு படங்களும் ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்தார். ஆனால் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம், வணங்கான் படத்தில் இருந்து சூர்யா வெளியேறினார்.

- Advertisement -

பின்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் திஷா படானி, கோவை சரளா, யோகி பாபு, சன்னி தியோல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம், ரூ.150 கோடி பட்ஜெட்டில் 10 மொழிகளில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

அண்மையில் கங்குவா படத்தில் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் பின் நடிகர் சூர்யா, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பின் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இதனால் சூர்யாவின் அடுத்தடுத்த படங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதனால் சூர்யா பான் இந்தியா நாயகனாக பார்க்கப்பட்டு வருகிறார். இதனிடையே சூர்யா அண்மை காலமாக மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். இதனால் பாலிவுட் இயக்குநர்களுடன் சூர்யாவுக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியது.

- Advertisement -

ரங்தே பசந்தி, பாக் மில்கா பாக், டூஃபான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஓம்பிரகாஷ். இவர் மகாபாரத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை கொண்டு கதை ஒன்றை எழுதியுள்ளதாகவும், அதில் கர்ணனாக நடிக்க சூர்யாவை அணுகியுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷை நடிகர் சூர்யா சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யாவின் முதல் நேரடி இந்தி படமாக இது இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

Most Popular