Entertainment

வடக்கன்ஸ் பற்றிய பார்வை.. யாதும் ஊரே யாவரும் கேளிர்.. விஜய் ஆண்டனியின் நெத்தியடி பதிவு!

டி.ராஜேந்தரன், கங்கை அமரன், ஹிப் ஹாப் ஆதி வரிசையில் திரையுலகில் பன்முக திறமையோடு வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர், பட தொகுப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், மற்றும் தற்போது பிச்சைக்காரன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அதேபோல் சமூக வலைதளங்கள் மூலமாக விஜய் ஆண்டனி பதிவுடும் கருத்துக்களும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

அண்மை காலமாக தமிழ்நாட்டில் வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பிழைப்புக்காக குடியேறி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் பிரபல யூடியூபர்களான பரிதாபங்கள் கோபி, சுதாகர் வடமாநில மக்கள் பற்றி வெளியிட்ட வீடியோ பல்வேறு தளங்களிலும் பிரபலமாகியது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வடமாநில மக்கள் ஆதிக்கம் இருப்பதாகவும், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை வடமாநில மக்கள் அபகரித்து கொள்வது போன்ற கருத்துகள் அதிகமாக பேசப்பட்டு வந்தது.

Advertisement

அதேபோல் திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு இளைஞர்களை தாக்கியதாக பகிரப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவ, வடமாநில மக்கள் மீதான தமிழ்நாடு மக்களின் பார்வை மாற தொடங்கியது. இதனை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் உள்ளிட்டோர் பேசத் தொடங்கினர். அவர்கள் பிழைப்புக்காக வருவோரை எதிர்க்கவில்லை என்றும், குற்றத்தில் ஈடுபடுவோரை மட்டுமே எதிர்ப்பதாகவும் விளக்கம் கொடுத்தனர்.

இந்த நிலையில் வட மாநில மக்களுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது போன்ற கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் ஆண்டனியின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அனைவரும் பிழைப்புக்காகவே சொந்த ஊரை விட்டு வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்வதை மிக இயல்பாக விஜய் ஆண்டனி பதிவிட்டது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top