Tuesday, May 7, 2024
- Advertisement -
HomeEntertainment23 வருஷத்துக்கு பின் விஜய்-க்கு ஜோடியாகிறேன்.. விஜய் பார்த்ததும் சொன்னது இதுதான்.. நடிகை சினேகா பகிர்ந்த...

23 வருஷத்துக்கு பின் விஜய்-க்கு ஜோடியாகிறேன்.. விஜய் பார்த்ததும் சொன்னது இதுதான்.. நடிகை சினேகா பகிர்ந்த சீக்ரெட்

லியோ படத்திற்கு பின் நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் மட்டுமல்லாமல் சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், வைபவ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

புத்தாண்டவை முன்னிட்டு விஜய் நடித்து வரும் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. இந்த படத்தில் விஜய் முதியவர் மற்றும் இளைஞர் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஃபர்ஸ்ட் லுக்கில் இரண்டு விஜய் இருந்ததோடு, பைக் சேஸிங்கில் இருவரும் சேர்ந்து செல்வது போலவும், விமானம் ஓட்டிவிட்டு நடந்து வருவது போலவும் வெளியிடப்பட்டன.

இதனால் ஒரு விஜய்-க்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடிக்கும் சூழலில், இன்னொரு விஜய்-க்கு யார் ஜோடி என்பது கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் GOAT படம் பற்றி நடிகை சினேகா சில ரகசியங்களை கூறியுள்ளார். அதில், 23 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்-க்கு ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

- Advertisement -

படத்தின் பூஜையின் போது விஜயை சந்தித்தேன். அப்போது அவரிடம் எப்படி இன்னும் இளமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரும், நீங்க எப்படிங்க.. இன்னும் அப்படியே இருக்கீங்க என்று கேட்டார். இருவரும் சிரித்து சிறிது நேரம் பேசினோம். படப்பிடிப்பில் விஜய் ரொம்ப ரொம்ப ஸ்வீட்டாக நடந்து கொண்டார்.

- Advertisement -

இந்த படத்தில் எனது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். அதேபோல் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்திக்கும் விஜய், அவர்களுக்கு அவ்வளவு மரியாதை அளிப்பது ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்தார். 23 ஆண்டுகளுக்கு பின் நடிகர் விஜய் – சினேகா இணைந்து நடித்த வசீகரா திரைப்படம் ரசிகர்களிடையே இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் சினேகா ஜோடி சேர்ந்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular