Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeEntertainment"D51" மீண்டும் இணையும் ரவுடி பேபி கூட்டணி.. ராஷ்மிகா மட்டுமல்லாமல் சாய் பல்லவியும் இருக்காராம்!

“D51” மீண்டும் இணையும் ரவுடி பேபி கூட்டணி.. ராஷ்மிகா மட்டுமல்லாமல் சாய் பல்லவியும் இருக்காராம்!

நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தென்காசி, கடலூர் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலத்தை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தனுஷின் பிறந்த நாளான வரும் 28 ஆம் தேதி அன்று, கேப்டன் மில்லரின் டீசர் வெளியாகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது 50வது படத்தை எடுத்து வருகிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் தனுஷிற்கு சகோதரர்களாக எஸ் ஜே சூர்யா மற்றும் சந்திப் கிஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவனம் ஈர்த்த சந்திப் கிஷன், இந்தப் படத்தில் இணைய இருப்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

இதனிடையே வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து, தனுஷ் மீண்டும் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இந்தப் படத்தை இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டு, பட பூஜையில் நடைபெற்றது. அதன் பிறகு, படத்தின் அப்டேட் ஏதும் வெளியாகாமல் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது தனுஷ் சேகர் கம்முலா படத்தில், நாகர்ஜுனுக்கு முக்கிய ரோல் இருப்பதாக புதிய தகவல் கசிந்துள்ளது. மேலும் தனுசுக்கு ஜோடியாக நடிக்க, ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழியில் இந்த படம் உருவாக உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தப் படத்தில் சாய் பல்லவியும் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் – சாய் பல்லவி இருவரும் ஏற்கனவே மாரி-2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் இந்தப் படத்தில் சாய் பல்லவி ஜோடியாக நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular