Tuesday, March 19, 2024
- Advertisement -
HomeEntertainment'டாடா' படத்தின் பிரம்மாண்ட வெற்றி.. சம்பளத்தை உயர்த்திய கவின்.. அடுத்த ஜோடி யாருனு பாருங்க..!

‘டாடா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி.. சம்பளத்தை உயர்த்திய கவின்.. அடுத்த ஜோடி யாருனு பாருங்க..!

கடந்த 2019ம் ஆண்டில் வெளியான நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கவின். இநத்ப் படம் அவருக்கு சரியாக கைக்கொடுக்காத நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கவினுக்கு வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுவரை வந்த கவினுக்கு, ரசிகர்களாக ஏராளமானோர் இருந்தனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பிகில் பட புகழ் அம்ரிதா ஐயருடன் இணைந்து நடித்த லிப்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல் கவனின் நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றது. இதன் பின்னர் தான் அண்மையில் டாடா திரைப்படம் வெளியாகியது. இதில் அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்திருந்தார் கவின். இந்தப் படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாசின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்திருந்தது.
இந்தப் படத்தில் பாக்கியராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில், படம் வெளியாகி சில தினங்களிலேயே பல கோடி வசூலை அள்ளியது. தற்போது அமேசான் ப்ரைமில் டாடா படம் வெளியாகியுள்ளது. ஓடிடியிலும் டாடா படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்தப் படத்தின் எக்குதப்பான வரவேற்பு மற்றும் வசூலை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை கவின் உயர்த்தியுள்ளார். லட்சங்களில் சம்பளம் பெற்றிருந்த கவின், தற்போது ஒன்றரை கோடிக்கு தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. டாடா படத்தை தொடர்ந்து கவினுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் கவின்.

- Advertisement -

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாகவும். காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்தப் படமும் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக வாணி போஜனுடன் இணைந்து ஊர்க்குருவி என்ற படத்தில் நடித்து வருகிறார் கவின்.

Most Popular