Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeEntertainment”உக்ரம்” படத்தை பட்டி ரிங்கரிங் செய்தால் ”சலார்”.. பிரபாஸ்-க்கு விடிவு காலமே வராது போலவே.. தெலுங்கு...

”உக்ரம்” படத்தை பட்டி ரிங்கரிங் செய்தால் ”சலார்”.. பிரபாஸ்-க்கு விடிவு காலமே வராது போலவே.. தெலுங்கு சினிமாவுக்கு விபூதி அடித்த பிரசாந்த் நீல்!

கே.ஜி.எஃப் படத்தின் இரு பாகங்களும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. பாட்ஷா படத்திற்கு பின் கமர்ஷியல் சினிமாவுக்கு புதிய பெஞ்ச் மார்க் படமாக கே.ஜி.எஃப் அமைந்தது. இதனால் இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்த இயக்கப் போகும் படம் எது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பிரபாஸ்-க்கு கதை ஒன்றை கூறி கே.ஜி.எஃப் ரிலீஸ்-க்கு முன்பாக படப்பிடிப்பை தொடங்கினார்.

- Advertisement -

பிரபாஸ், பிரித்வி ராஜ், ஷ்ருதி ஹாசன், ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர். இதனை தொடர்ந்து சலார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. தொடர் சலார் படத்தின் டீசரில் டைனோசர் கதை கூறப்பட்ட போது, ரசிகர்களும் பலரும் கிண்டல் செய்ய தொடங்கினார்கள். இருப்பினும் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் சலார் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது. அந்த படத்தின் டீசரில் பிருத்விராஜ் உலகையே தனது கைக்குள் அடக்க நினைத்த போது, வில்லன் ஒருவரிடம் மாட்டிக் கொண்டு தோல்வியடைவதை போலவும், அதன்பின் நண்பனான பிரபாஸின் நட்பு காரணமாக உலகையே வெல்வது போல் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பிரபாஸ் – பிருத்விராஜ் இருவரும் ஹீரோ வில்லனாக மோத போகிறார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரையும் நண்பர்களாக காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார் பிரசாந்த் நீல். இதனால் முதல் பாகத்தின் இறுதியில் பிருத்விராஜ் – பிரபாஸ் இடையில் மோதல் ஏற்படும் என்றும், இரண்டாம் பாகத்தில் இருவரும் நேருக்கு நேர் மோதுவது போல் படமாக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தின் கதை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய உக்ரம் படத்தின் கதை தான். முதல் படமான உக்ரம் தோல்வியடைந்த நிலையில், அதே க்லதைக்கு புதிய திரைக்கதை அமைத்து பிரபாஸ் ஹீரோவாக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இதனால் உக்ரம் படத்தை யூட்யூபில் இருந்தும் தயாரிப்பு நிறுவனம் நீக்கியுள்ளது. இதனால் பிரசாந்த் நீல் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனுக்கே வியூதி அடித்துள்ளார் என்று கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. 

Most Popular