Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் இணைந்த கலகத்தலைவன் கூட்டணி.. அஜித்குமாருடன் பிக்பாஸ் நடிகர் வெளியிட்ட புகைப்படம்.. உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

மீண்டும் இணைந்த கலகத்தலைவன் கூட்டணி.. அஜித்குமாருடன் பிக்பாஸ் நடிகர் வெளியிட்ட புகைப்படம்.. உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

துணிவு படத்திற்கு பின் நடிகர் அஜித் குமார் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. துணிவு படம் பிரம்மாண்ட ஹிட்டானதால், அடுத்த படத்தை உடனடியாக தொடங்க லைகா நிறுவனம் தீவிரமாக இருந்தது. ஆனால் இயக்குநர் விக்னேஷ் சிவன் திடீரென விலக்கப்பட்டதால், மகிழ் திருமேனி இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

- Advertisement -

ஆனால் திரைக்கதை அமைக்க மகிழ் திருமேனி நேரம் எடுத்து கொண்டதால், விடாமுயற்சி படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதன்பின் அக்டோபர் முதல் வாரத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்குவதாக தகவல் வெளியாகியது. அதற்கேற்ப விடாமுயற்சி படக்குழுவினர் ஒட்டுமொத்தமாக இணைந்து அஜர்பைஜானுக்கு பயணம் மேற்கொண்டனர்.

அதன்பின் அஜித்குமாருக்கு ஜோடியாக நடிகை திரிஷா மற்றும் ரெஜினா இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பிற்கு இடையே கலை இயக்குநர் மிலன் உயிரிழந்தார். இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து 2 மாதங்கள் அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடந்து வந்தது.

- Advertisement -

இதன்பின் சிறிய இடைவேளை விட்ட மகிழ் திருமேனி சில வாரங்களுக்கு முன் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பை தொடங்கினார். அந்த படப்பிடிப்பில் நடிகர் அஜித் குமாருடன் இணைந்து அர்ஜூன் மற்றும் திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் தொடர்பான காட்சிகள் நடைபெற்று வந்த நிலையில், அஜித்குமார் எடை குறைத்த புகைப்படங்கள் வெளியாகியது.

- Advertisement -

தற்போது நடிகர் ஆரவ் நடிகர் அஜித்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் விடாமுயற்சி படத்தில் ஆரவ் வில்லனாக நடிப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கலகத்தலைவன் மிரட்டலான நடிப்பை ஆரவ் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Most Popular