Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஎப்போதும் உதவக் கூடிய அஜித் குமார் சார்.. சரியான நேரத்தில் விஷ்ணு விஷால், அமீர் கானுக்கு செய்த ...

எப்போதும் உதவக் கூடிய அஜித் குமார் சார்.. சரியான நேரத்தில் விஷ்ணு விஷால், அமீர் கானுக்கு செய்த  உதவி.. எப்படி தெரியுமா?

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்கிய நிலையில், அரசு தரப்பில் விரைவாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், தான் வசித்து வரும் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாகவும், காரப்பாக்கம் வில்லா பகுதியில் 300க்கும் அதிகமானோரின் நிலைமை இதுதான் என்றும் பதிவிட்டார்.

- Advertisement -

இதனால் அரசு தரப்பில் உடனடியாக உதவி தேவை என்று ட்விட்டர் வாயிலாக கோரிக்கை வைத்தார். அந்த பதிவின் கீழ் தான் எடுத்த செல்ஃபி புகைப்படங்களையும் இணைத்தார். இதன்பின் அரசு தரப்பில் காரப்பாக்கம் பகுதியில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, போட் வாயிலாக நடிகர் விஷ்ணு விஷால், அவரின் மனைவி ஜுவாலா கட்டா உள்ளிட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அந்த புகைப்படங்கள் வெளியான நிலையில், அவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் இருந்தது தெரிய வந்தது. சென்னையில் உள்ள மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ள தாயின் உடல்நிலையை பார்த்து கொள்வதற்காக கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக அமீர் கான் சென்னையில் தான் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது.

- Advertisement -

இந்த நிலையில் விஷ்ணு விஷால் பதிவிட்ட் மற்றொரு பதிவு தான் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது. அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் குமார், விஷ்ணு விஷால் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் உள்ளனர். நடிகர் அஜித் குமார் உடல் நன்றாக குறைத்திருந்தார். இந்த பதிவில், எங்களின் பொதுவான நண்பர் குறித்து அறிந்த அஜித் குமார் சார், உடனடியாக எங்களின் வில்லா பகுதியில் உள்ள அனைவருக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அதிலும் அஜித் குமாரை பற்றி விஷ்ணு விஷால், எப்போதும் உதவக் கூடிய அஜித் சார் என்று கூறியது அவரின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அஜித் குமாரின் ஒரு புகைப்படம் வராதா என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பணக்காரர்களுக்கு அஜித் குமார் உதவியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular