Tuesday, April 23, 2024
- Advertisement -
HomeEntertainmentமூக்குத்தி அம்மன் படத்தில் அனுஷ்கா நடிக்க வேண்டியதாம்.. ஆர்ஜே பாலாஜி சொன்ன சீக்ரெட் தகவல்!

மூக்குத்தி அம்மன் படத்தில் அனுஷ்கா நடிக்க வேண்டியதாம்.. ஆர்ஜே பாலாஜி சொன்ன சீக்ரெட் தகவல்!

நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட்டானது. இந்தப் படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.  சாமியார்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வெற்றிப் படமாக்கினர். அதேபோல் நீண்ட காலத்திற்கு பின் சாமி படம் வெளியானதும், படம் மீது நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட காரணமாக இருந்தது. 

- Advertisement -

எல்கேஜி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஆர்ஜே பாலாஜி, மூக்குத்தி அம்மன் திரைப்படம் பெரும் ஹிட்டடித்து. மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகியதால், வெளிமாநில ரசிகர்கள் பாராட்டினர். அதுமட்டுமல்லாமல் ஆர்ஜே பாலாஜி, இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இணை இயக்குநராகவும் இணைந்து பணியாற்றி இருந்தார்.

இந்த படத்தின் அபார வெற்றி காரணமாக ஆர்ஜே பாலாஜி ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ரன் பேபி ரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் அம்மனாக நடித்த நயன்தாராவுக்கு மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கும் ஐடியா இல்லை என்று தனது சமீபத்திய பேட்டியில் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த ரோலில் நடிக்க அனுஷ்காவை அணுகியதாகவும், அவர் படப்பிடிப்பிற்கு வர சம்மதித்தாலும் 8 மாதங்கள் காத்திருக்க முடியுமா என்று கேட்டதாக கூறியுள்ளார். 

ஆனால், 8 மாதங்கள் காத்திருக்க முடியாது என்பதால் தொடர்ந்து நயன்தாராவை அணுகியதாகவும் கதையை கேட்டவுடன் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டதாகவும் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். இந்த ரோல், நயன்தாராவை வித்தியாசமாக ரசிகர்களுக்கு காட்டியது. இதன் மூலம் நயன்தாராவும் ஓடிடி-யில் தனது மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Most Popular