Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentதமிழை கடந்து அக்கட தேசம் சென்ற பிக் பாஸ் பிரபலம்.. கதாநாயகியான மாறிய பிக்பாஸ் மாயா!

தமிழை கடந்து அக்கட தேசம் சென்ற பிக் பாஸ் பிரபலம்.. கதாநாயகியான மாறிய பிக்பாஸ் மாயா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விக்ரம் மற்றும் ஃபகத் ஃபாசில் உடன் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார் மாயா. அவரின் குறும்புத்தனமான நடிப்பும், மாடர்ன் உடையில் அழகுடன் காணப்பட்டதால், இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. 

- Advertisement -

இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் மாயா நடித்திருந்தார். இதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வன்ம குடோனாகவும், செல்ஃபிஷ்-ஆகவும் செயல்பட்ட பிக் பாஸ் மாயாவுக்கு ரசிகர்களும் அதிகமாக குவிந்தனர். 2கே கிட்ஸ்-ன் ஆதரவுடன் இறுதிச்சுற்று வரை மாயா வந்தார். 

இதனிடையே பிக் பாஸ் மாயா ஆடிய டான்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது. இதன்பின் நிகழ்ச்சியில் இருந்து வெளி வந்த மாயா, அடுத்தடுத்து தனது சினிமா பணிகளை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் தெலுங்கு படமொன்றி நடிகை மாயா நாயகியாக நடித்து முடித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

- Advertisement -

ராம்ஸ் என்பவர் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் மாயா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஃபைட்டர் ராஜா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை இளம் இயக்குநர் கிருஷ்ணா பிரசாத் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ட்ரெண்டாகி வருகிறது.

- Advertisement -

இதனால் தமிழிலும் இனி மாயாவுக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது நடிகை மாயா, தான் ஒரு கதை ரெடி செய்து வைத்திருப்பதாகவும், அதனை இயக்குவதே லட்சியம் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular