Friday, April 26, 2024
- Advertisement -
HomeEntertainmentலியோ படத்தில் இணையும் அஜித் பட நடிகை.. லோகேஷ் உடன் திடீர் செல்ஃபி.. உண்மையா?

லியோ படத்தில் இணையும் அஜித் பட நடிகை.. லோகேஷ் உடன் திடீர் செல்ஃபி.. உண்மையா?

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக 4 ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனையடுத்து அவரது படத்தில் நடிக்க நடிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அவர் தற்போது விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், கௌதம் வாசுதேவ், மிஷ்கின், த்ரிஷா, சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. காஷ்மீரில் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவருகிறது. மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யும், லோகேஷும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனிடையே லீயோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வரும் சூழலில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த செயலை செய்தது யார் என்பது குறித்து படக்குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது

இந்நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை அபிராமி லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜை நேரில் சந்தித்திருக்கிறார். அதுதொடர்பான புகைப்படம் தற்போது ட்விட்டரில் வெளியாகியிருக்கிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் அபிராமியும் நடிக்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பிவருகின்றனர்.

- Advertisement -

இருப்பினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அபிராமி ஏற்கனவே அஜித் – அ.வினோத் கூட்டணியில் உருவான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வையில் நடித்திருந்தார். அஜித் படத்தை தொடர்ந்து பெரிய படங்களில் கமிட்டாகாமல் இருந்து வந்த அபிராமி, திடீரென லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Most Popular