Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeEntertainmentவிஜய் பட நடிகைக்கு டும் டும் டும்.. மஞ்சும்மால் பாய்ஸ் நடிகரை திருமணம் செய்யும் அபர்ணா...

விஜய் பட நடிகைக்கு டும் டும் டும்.. மஞ்சும்மால் பாய்ஸ் நடிகரை திருமணம் செய்யும் அபர்ணா தாஸ்!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் அபர்ணா தாஸ். இந்த படத்தில் நடித்ததன் மூலமாக, நடிகர் கவினுடன் ”டாடா” படத்தில் நடிக்கும் வாய்ப்பு அபர்ணா தாஸ்-க்கு கிடைத்தது. கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஆதிகேசவா படத்திலும் நடித்தார். அதேபோல் மலையாளத்தில் மனோஹரம், ப்ரியன் ஒட்டதில்லானு உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். தற்போது சீக்ரெட் ஹோம் என்ற படத்தில் நடித்து வருகிறார். 2018ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் இவர் விரைவில் திருமணம் செய்ய உள்ளது தெரிய வந்துள்ளது.

ஹிருதயம் படத்தை இயக்கிய வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் படத்தின் மூலமாக அறிமுகமானவர் தீபக் பரம்போள். இவர் தட்டத்தின் மரையாது, திரா, கண்ணூர் ஸ்குவாட் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திலும் தீபக் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

தற்போது அபர்ணா தாஸ் – தீபக் இருவரும் இன்னும் சில வாரங்களில் திருமணம் செய்யவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்களின் திருமண அழைப்பிதழ் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. ஏப்ரல் 24ஆம் தேதி கேரளாவின் வடக்கன்சேரி பகுதியில் எளியாக குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னரும் அபர்ணா தாஸ் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் அபர்ணா தாஸ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தம் மோதிரத்தை பதிவிட்டு சூசகமாக திருமண அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Most Popular