Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentதிருப்பதியில் மொட்டை போட்டதும், சூட்டோடு சூட்டாக 50வது படத்தின் வேலையை ஆரம்பித்த தனுஷ்… இது பக்கா...

திருப்பதியில் மொட்டை போட்டதும், சூட்டோடு சூட்டாக 50வது படத்தின் வேலையை ஆரம்பித்த தனுஷ்… இது பக்கா கேங்க்ஸ்டர் படமாம்… போஸ்டர் பார்த்து மிரளும் ரசிகர்கள்!

நடிகர் தனுஷின் 50வது படத்திற்கான ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

- Advertisement -

50வது படத்தில் தனுஷ்

நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென்காசி, கடலூர் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது 50வது படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தனுஷ்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் தனுஷிற்கு சகோதரர்களாக எஸ் ஜே சூர்யா மற்றும் சந்திப் கிஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவனம் ஈர்த்த சந்திப் கிஷன், இந்தப் படத்தில் இணைய இருப்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

- Advertisement -

வடசென்னையில் கேங்ஸ்டர் படம்

தனது 50 ஆவது படத்தை தனுஷே இயக்குகிறார் என்று அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க வட சென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக இது உருவாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்தில் சந்திப் கிசனுக்கு ஜோடியாக இவர் நடிக்கிறாராம்.

- Advertisement -

தனுசுக்கு தங்கை வேடத்தில் துசாரா விஜயன் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக, சென்னை ஈ சி ஆர் சாலையில் 500 வீடுகளைக் கொண்ட பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாகவும், வரும் ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் ஏற்கனவே கூறப்பட்டது.

மொட்டை தலையுடன் மிரட்டும் நாயகன்

தனுஷ், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பணிகளை முடித்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அவர் தனது மகன்களுடன் திருப்பதியில் மொட்டை அடித்து தரிசனம் செய்தார். இதன்பின்னர் சென்னை திரும்பிய அவர், சூட்டோடு சூட்டாக தனது 50வது படத்தின் வேலைகளை ஆரம்பித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டதற்கான போஸ்டர் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. மொட்டை தலையுடன் பின்பக்கமாக திரும்பியிருக்கும் தனுஷ், மிரள வைக்கிறார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்த படம், அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular