Monday, November 4, 2024
- Advertisement -
HomeEntertainmentகேப்டன் மில்லரில் இருக்கும் முக்கிய நடிகை… அடுத்தடுத்து வரும் பாகங்கள்… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும்...

கேப்டன் மில்லரில் இருக்கும் முக்கிய நடிகை… அடுத்தடுத்து வரும் பாகங்கள்… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் படக்குழு…

- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்திற்கான வேலையில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரே இயக்கி நடிக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், செல்வ ராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் தனுஷிற்கு சகோதர்களாக வருகிறார்களாம். துஷாரா, தனுஷிற்கு தங்கையாக நடிக்கிறாராம். வடசென்னையை கதைகளமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறதாம்.

அநேகமாக அடுத்த மாதத்திற்கு சூட்டிங் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்க, நாகார்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனைத்தொடர்ந்து மாரி செல்வராஜூடன் இணையும் திட்டமிட்டுள்ளார் தனுஷ். இப்படி பரபரப்பாக அவர் ஓடிக் கொண்டிருக்க, தனுஷின் கேப்டர் மில்லர் திரைப்படம் திரையரங்குகளுக்கு வருவதற்காக வேலையும் தீவிரமடைந்திருக்கிறது.

- Advertisement -

ராக்கி, சாணி காயிதம் படங்களை எடுத்த அருண் மாதேஸ்வரன்தான் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார். எப்போது தனது படங்களை ரத்தம் சதையுமாக காட்சிப்படுத்தும் இந்த இயக்குநர், இந்த முறை துப்பாக்கி சத்தம், குண்டு மழைகளுக்கு இடையே படத்தை எடுத்துள்ளாராம். தென்காசி, மதுரை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இதற்கான சூட்டிங் பணிகள் நடைபெற்றது.
அப்போதே அனுமதியின்றி நாட்டு வெடிகள் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. ஒரு வழியாக அந்த பிரச்சினைகள் முடிய, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

ஆங்கிலேயர் காலணி ஆதிக்கத்தில் இருந்ததை அடிப்படையாக கொண்டு கேப்டன் மில்லர் தயாராகி இருக்கிறது. இதில் தனுஷுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அடர்ந்த தாடி, நீளமான முடி என தனுஷின் கெட்-அப் வேறு லெவலில் இருப்பதாக பலர் கமெண்ட் செய்தனர். படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் உழைப்பை கவனித்த தனுஷ், அவருக்கு தனது இன்னொரு படத்தையும் இயக்கும் வாய்ப்பை தனுஷ் கொடுத்தார். இந்த படத்தை தனுஷின் வொன்டர்பார் நிறுவனமே தயாரிக்கிறது.

கேப்டன் மில்லர் திரைப்படம், இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறதாம். இதில் முதல் பாகம் தற்போது எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் படத்தில், அருவி படத்தின் மூலம் புகழ் பெற்ற அதிதி பாலன் நடித்துள்ளாராம். அவருக்கு கேப்டன் மில்லரில் மிக முக்கிய கதாபாத்திரம் இருக்கிறதாம். இந்த புதிய தகவலால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் டிசம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Most Popular