Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentசூட்டிங் முடிந்த போதும், திடீரென ஊட்டிக்கு கிளம்பிய கேப்டன் மில்லர் படக்குழு… என்ன சங்கதின்னு தெரியுமா?

சூட்டிங் முடிந்த போதும், திடீரென ஊட்டிக்கு கிளம்பிய கேப்டன் மில்லர் படக்குழு… என்ன சங்கதின்னு தெரியுமா?

தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, ஏன் ஹாலிவுட்டிலும் பிஸியாக இருப்பவர் நடிகர் தனுஷ். வாத்தி திரைப்படத்திற்கு பிறகு தனுஷிற்கு எக்கச்சக்க திரைப்படங்கள் வரிசையில் இருந்தாலும், அவர் அருண் மாதேஸ்வரனின் கேப்டன் மில்லர் கதையை தேர்ந்தெடுத்தார். பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், ஜான் கொக்கென் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

- Advertisement -

மதுரை, தென்காசி, கடலூர் மாவட்டங்களில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. அடர்ந்த தாடி, நீண்ட முடியுடன் சூட்டிங்கில் கலந்து கொண்ட தனுஷ், துப்பாக்கியுடன் போர்க்களத்தில் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுத்த கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது.

தனுஷ் திரைப்படத்திலேயே, மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. அதில் மூன்று விதமான தோற்றங்களில் காட்சியளித்த தனுஷ், கையில் துப்பாக்கியுடன் கண்பார்வையாலேயே மிரட்டி எடுத்தார். இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ராக்கி, சாணி காயிதம் படங்களை ரத்தமும் சதையுமாக எடுத்த அருண் மாதேஸ்வரனுக்கு, தனி ரசிகர் பட்டாளம் இங்கு உள்ளது. இதனால், கேப்டன் மில்லர் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது மட்டுமில்லாமல், தனுஷ் படத்திலேயே இது வித்தியாசமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

படத்தில் அருண் மாதேஸ்வரனின் உழைப்பை பார்த்து வியந்த தனுஷ், மீண்டும் அவருடன் இணைவதாக அறிவித்தார். தற்போது படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழு ஊட்டி விரைந்துள்ளது. பேட்ச் ஒர்க் பணிகளுக்காகவே படக்குழு அங்கு விரைந்து இருப்பதாகவும், அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Most Popular