Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeEntertainmentவாடிவாசலில் களமிறங்கும் பருத்திவீரன் இயக்குனர்… காளையுடன் மோத தயாராக சூர்யா… இந்த ஆண்டு தொடங்கும் படப்பிடிப்பு!

வாடிவாசலில் களமிறங்கும் பருத்திவீரன் இயக்குனர்… காளையுடன் மோத தயாராக சூர்யா… இந்த ஆண்டு தொடங்கும் படப்பிடிப்பு!

சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

வெற்றிப்பட இயக்குனர் வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் “சி சு செல்லப்பா” எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார். இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய “அசுரன்” மற்றும் “விசாரணை” படங்களும் தற்போது வெளியாகியுள்ள “விடுதலை” படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே.

முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் “வாடிவாசல்” படத்தின் டைட்டில் லுக் கடந்த ஆண்டு வெளியானது. தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ள வெற்றிமாறன், படத்தை இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய முயற்சி செய்து வருகிறார்.

- Advertisement -

விரைவில் வாடிவாசல் படபிடிப்பு

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், விடுதலை படத்தின் பணிகளை தொடர்ந்து வருவதாகவும், இது முடிந்த பிறகு வாடிவாசல் எடுக்கும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். லண்டனில் படத்திற்கான சிஜி பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். வெற்றிமாறன் வாடிவாசல் படத்தில் இருந்து விலகி இருப்பதாகவும், இதனால் சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி முறிந்ததாகவும் பரவலாக பேசப்பட்ட நிலையில், படம் கண்டிப்பாக எடுக்கப்படும் என இயக்குனர் கூறியது சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

மதுரையை களமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தை, கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது வாடி வாசலில் இயக்குனர் அமீர் இணைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

Surya and Vetrimaaran Vaadivaasal

வாடிவாசலில் இணையும் பருத்திவீரன் இயக்குனர்

இதுகுறித்து பேசியுள்ள அவர், வெற்றிமாறன் தன்னை அழைத்து படத்தில் நடிக்குமாறு கூறியதாகவும், தான் ஒருவன் தான் இந்த படத்தின் கதைக்கு சரியான தேர்வாக இருப்பேன் என அவர் தெரிவித்ததாகவும் கூறினார். படத்திற்காக சூர்யா காளைகளுடன் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்த இயக்குனர் அமீர், தானும் காளையுடன் பயிற்சி பெற தயாராகி வருவதாக கூறினார். பருத்திவீரன் பட இயக்குனர் அமீர் வாடிவாசலில் இணைந்திருப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular