Tuesday, May 7, 2024
- Advertisement -
HomeEntertainmentஆண்டனி தாஸ்… ஹரால்டு தாஸ்… லியோ தாஸ்… அப்போ மூணு பேரும் அண்ணன் தம்பிகளா… ஒன்னும்...

ஆண்டனி தாஸ்… ஹரால்டு தாஸ்… லியோ தாஸ்… அப்போ மூணு பேரும் அண்ணன் தம்பிகளா… ஒன்னும் விளங்கலையே என புலம்பும் ரசிகர்கள்…

இந்திய திரை உலகில் தற்போது லியோ ஃபீவர் ஆரம்பித்து விட்டது என்றே கூறலாம். வரும் 19ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து லியோ குறித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த திரைப்படம் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதற்கு முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான்.

- Advertisement -

மாஸ்டர் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த இயக்குனர், அடுத்ததாக விக்ரம் படத்தை எடுத்தார். அதில் அவர் அறிமுகப்படுத்திய எல் சி யூ கான்செப்ட், வேற லெவலில் ரீச் ஆகியதால் இந்தப் படமும் அதுவாகதான் இருக்க வேண்டும் என்ன ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்தே அதற்கான அப்டேட்களை தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிட்டு வருகிறார்.

காஷ்மீரில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு, அதற்கான வீடியோவை வெளியிட்டு விஜய் ரசிகர்களை அவர் குஷிப்படுத்தினார். இது மட்டுமல்ல விஜய் பிறந்தநாளை ஒட்டி நான் ரெடி தான் பாடலும் வெளியானது. பட்டித் தொட்டி எங்கும் இந்த பாடல் ஹிட் அடிக்க, இளைஞர்களின் ரிங் டோனாகவும் மாறியது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்தது.

- Advertisement -

இதற்கான பணிகளும் நடைபெற்று வந்த நிலையில், திடீரென நிகழ்ச்சியை தயாரிப்பாளர் லலித் குமார் ரத்து செய்தார். இதனால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விஜய் ரசிகர்கள் குழம்பி போயினர். நிகழ்ச்சிக்கான போலி பாஸ்கள் அதிகளவு உலா வந்ததாகவும், இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் வரும் என்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பாஸ் கோரிக்கை அதிகம் இருந்ததாலேயே இசை வெளியீட்டு நிகழ்ச்சியை கைவிட்டதாக லலித் குமாரும் தெரிவித்திருந்தார். லியோ படத்தில் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என்று அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் படத்திலிருந்து இரண்டாம் பாடலான பதாஸ் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விஜயின் பெயர் லியோதாஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சஞ்சய்தத் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்திலும், அர்ஜுன் ஹரால்டு தாஸ் என்ற ரோலிலும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மூன்று பேரும் அண்ணன் தம்பியாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் சமீபத்தில் வெளியான போஸ்டரில் விஜயையும் சஞ்சய் தத்தும் மோதிக் கொள்வது போல் புகைப்படம் இருந்தது. இதனால் என்ன கதை என்றே புரியவில்லையே என்று ரசிகர்கள் குழம்பி போய் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Most Popular