Saturday, May 11, 2024
- Advertisement -
Homeசினிமாஜெய்லர் திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

ஜெய்லர் திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு மாதமும் வெளிவந்தது.

- Advertisement -

பொங்கலுக்கு தளபதி விஜயின் வாரிசு மற்றும் தலையின் துணிவு திரைப்படம் அதைத்தொடர்ந்து நடிகர் சிம்புவின் 10 தல திரைப்படம்.பின்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளாக இருந்த மணிரத்தினத்தின் கனவு காவியம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம்.

நடிகர் தனுஷ் நடித்த வாத்தி மேலும் எதிர்பார்ப்புதலே இல்லாமல் இந்த வரிசையில் இடம் பிடித்தது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரியன் நடித்த விடுதலை என்று திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் நடிகர் ,உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் ,தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் என்று தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வரிசையில் இத்தனை திரைப்படங்களுடனும் ஒப்பிடுகையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்
முதல் இடத்தை பிடித்திருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயலர் திரைப்படம்.

- Advertisement -

பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் கலவையான விமர்சனங்களை பெற்று சிலரால் கேளிக்கைக்கும் அவமானத்திற்கும் ஆளான இயக்குனர் நெல்சன் தற்பொழுது முதன்மையான இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும்.

இந்த ஜெய்லர் திரைப்படம் தான் இதுவரை 500 இல் இருந்து 600 கோடி வரை வசூலை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அசுர வெற்றியடைந்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்டார் என்றுமே சூப்பர் ஸ்டார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த திரைப்படத்தை சமர்ப்பித்து இருக்கிறார்.

இயக்குனர் நெல்சன் இப்படிப்பட்ட புகழாரங்களை அணிந்து சிங்க நடை போட்டுக்கொண்டு இருக்கிறது.ஜெயிலர் திரைப்படம் இந்த திரைப்படத்தை ஒரு முறை பார்த்தால் போதாது மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்பதற்காக பல ரசிகர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

அதில் எத்தனை பேருக்கு மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது தெரியவில்லை ஆனால் இனி யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைமில் இத்திரைப்படத்தை வெளியிடப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெயலரை தேடித்தேடி சென்று ரசிகர்கள் பார்த்தது கொண்டிருந்தார்கள் இனி ஜெயிலர் தன்னைத்தேடி வர இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Most Popular