Tuesday, May 7, 2024
- Advertisement -
HomeEntertainmentதளபதியை பார்த்து சல்யூட் அடிக்கும் சஞ்சய் தத்.. லியோ படத்தில் சஞ்சய் தத் பெயரென்ன தெரியுமா.....

தளபதியை பார்த்து சல்யூட் அடிக்கும் சஞ்சய் தத்.. லியோ படத்தில் சஞ்சய் தத் பெயரென்ன தெரியுமா.. கெத்தாக இருக்கும் ஆண்டனி தாஸ்!

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. இதில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நாளுக்கு நாள் படத்தின் மீதான  எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நா ரெடி பாடல் வெளியாகி ஹிட் அடித்தது. லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான  விஷ்ணு எடவன் எழுதியிருக்கும் பாடல்களின் வரிகளும்  புதுவித அனுபவத்தை தந்துள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் பாடலை முணுமுணுக்க தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து விஜயின் படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்ததாக லியோ படக்குழு புகைப்படத்துடன் அறிவித்த நிலையில், ஒட்டுமொத்த படப்பிடிப்பும் 126 நாட்களில் முடித்ததாக அறிவிக்கப்பட்டது. 6 மாதங்களில் சரியான திட்டத்துடன் களமிறங்கிய 126 நாட்கள் பெரிய பட்ஜெட் படத்தின் ஷூட்டிங்கை லோகேஷ் முடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து விழா ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக வெகு நாட்களாகும். இந்தப் படம் கைதி படத்தை போல் பாடல்கள் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இசை வெளியீட்டு விழாவின் போதே ரசிகர்கள் அடுத்த பாடலை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.

- Advertisement -

இதன்பின் நடிகர் விஜய் வெளிநாட்டுக்கு சுற்றுலா புறப்பட, இனி  இசை வெளியீட்டு விழாவிற்கு தான் திரும்புவார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாத இரண்டாவது வாரத்தில் லியோ படத்தின் இசை வெளியீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லியோ படத்தின் வில்லனான சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சஞ்சய் தத், யாரையோ பார்த்து சல்யூட் அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சஞ்சய் தத் சல்யூட் அடிப்பது விஜய் பார்த்துதான் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் யூகிக்க தொடங்கியுள்ளனர். இந்த வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Most Popular