Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeEntertainmentபிரபாஸ் வாழ்க்கையில் விளையாடும் சலார்.. திட்டமிட்டபடி ரிலீஸ் இல்லையாம்.. புதிய தேதி விரைவில் அறிவிப்பு?

பிரபாஸ் வாழ்க்கையில் விளையாடும் சலார்.. திட்டமிட்டபடி ரிலீஸ் இல்லையாம்.. புதிய தேதி விரைவில் அறிவிப்பு?

பாகுபலி 2 படத்தின் வெற்றிக்கு பின் இந்திய நடிகராக வளர்ச்சி பெற்றார் நடிகர் பிரபாஸ். அதன்பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் உள்ளிட்ட படங்களில் ஒன்று கூட பாசிட்டிவ் விமர்சனங்களை பெறவில்லை. அதேபோல் தயாரிப்பாளர்களுக்கு போதுமான லாபத்தையும் கொடுக்கவில்லை. இதனிடையே பிரபாஸ் உடலையும் பராமரிக்கவில்லை.

- Advertisement -

இதனால் பிரபாஸின் சினிமா வாழ்க்கையே விரைவில் முடிவுக்கு வரும் என்று விமர்சனங்கள் எழுந்தன. அந்த நேரத்தில் தான் கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 என்று பான் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குநர் பிரசாந்த் நீல் பிரபாஸ் உடன் கைகோர்த்தார். கேஜிஎஃப் 2 படப்பிடிப்பின் போதே சலார் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்றது ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது.

இந்தப் படத்தில் பிரபாஸ் மட்டுமல்லாமல் ஷ்ருதி ஹாசன், ஷ்ரேயா ரெட்டி, மீனாட்சி சவுத்ரி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அதேபோல் வில்லன்களாக பிரித்விராஜ் மற்றும் ஜெகபதி பாபு நடித்து வருகின்றனர். இதையடுத்து சலார் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக டைனோசர் மூலம் பில்டப் கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் சலார் படம் கேஜிஎஃப் உலகில் நடக்கும் என்று கதை என்பது தெரிய வந்தது. இதனால் ராக்கி பாய்-க்கும் சலார் ஆர்மிக்கும் இடையில் என்ன ஒற்றுமை இருக்கும் என்று ரசிகர்கள் குழம்பினர். அதேபோல் கேஜிஎஃப் 2 வந்தபின், சலார் படத்தின் இரண்டாம் பாகமும் நிச்சயம் வரும் என்று இயக்குநர் பிரசாத் நீல் தெரிவித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் சலார் திரைப்படம் செப்.28ஆம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் செப்டம்பர் மாதம் தொடங்கிய இன்று காலை முதலே பிரபாஸ் ரசிகர்கள் சலாரை படத்தை ட்விட்டரில் ட்ரெண்டு செய்ய தொடங்கினர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது செப்.28ஆம் தேதி சலார் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாது என்றும், விஎஃப்எக்ஸ் பணிகள் தாமதம் காரணமாக கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சலார் படம் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

Most Popular