Thursday, April 25, 2024
- Advertisement -
HomeEntertainmentமுதலில் ராக்.. இப்போ ஜான் செனா.. அடுத்தடுத்து WWE நட்சத்திரங்களுடன் ஜோடி போடும் பிரியங்கா சோப்ரா!

முதலில் ராக்.. இப்போ ஜான் செனா.. அடுத்தடுத்து WWE நட்சத்திரங்களுடன் ஜோடி போடும் பிரியங்கா சோப்ரா!

பிரியங்கா சோப்ரா மேலும் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதால், ஹாலிவுட் வட்டாரத்தில் பிசியாகியுள்ளார். பாலிவுட்டில் பெரிதாக நடிப்பதை நிறுத்திய பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் பாலிவுட் தான் ஓரம்கட்டப்பட்டதாக அவர் கூறியிருந்தது விவாதத்தை கிளப்பியது.

- Advertisement -

இதனிடையே, ரூஸோ பிரதர்ஸின் ஏஜிபிஓ மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியோரால் உருவாக்கப்பட்ட சிட்டாடல் இணையத்தொடர் பிரியங்கா நடித்திருந்தார். ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த தொடரின் 1,2 அத்தியாயங்கள் ஏப்ரல் 28ஆம் தேதியும், தொடர்ந்து மே 26ஆம் தேதி வரையும் வாரம்தோறும் ஒரு அத்தியாயமும் வெளியாகவுள்ளது. இந்தநிலையில், அமேசானின் துணை நிறுவனமான அமேசான் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் ஆக்ஷன் படத்தில் பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமாகியுள்ளார். இதில் WWE குத்துச்சண்டை வீரரும், நடிகருமான ஜான் செனா, பிரபல ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா ஆகியோரும் நடிக்கின்றனர்.

- Advertisement -

ஹெட் ஆஃப் ஸ்டேட்ஸ் என பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்கா சோப்ராவின் அடுத்தடுத்த ஹாலிவுட் படங்களின் அப்டேட் வெளியாகிவருவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

Most Popular