Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentரன்பீர் கபூர் - ராஷ்மிகா கூட்டணியில் வெளிவந்த ”அனிமல்” படம் எப்படி இருக்கு? முதல் ரிவ்யூ...

ரன்பீர் கபூர் – ராஷ்மிகா கூட்டணியில் வெளிவந்த ”அனிமல்” படம் எப்படி இருக்கு? முதல் ரிவ்யூ இங்கே!

அர்ஜூன் ரெட்டி மற்றும் கபிர் சிங் (அர்ஜூன் ரெட்டி இந்தி ரீமேக்) படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் சந்தீப் ரெட்டி, அடுத்ததாக ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் உடன் ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி டியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

- Advertisement -

அனில் கபூர் – ரன்பீர் கபூர் இருவரும் தந்தை – மகனாக நடித்துள்ளனர். தந்தை முழு மனதுடன் நேசிக்கும் மகனின் பார்வையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையிலான உறவில் சிறிய பிரச்சனை வரும் போது கதை தொடங்குகிறது. முதல் பாதியில் முதல் 30 நிமிடங்கள் கதைக்கான அடித்தளமான அமைந்துள்ளது. 

அதன்பின் திரைக்கதையின் வேகம் உச்சத்தை அடையும் போது இடைவேளை வருகிறது. குறிப்பாக இடைவேளையில் வரும் சண்டை காட்சி இந்திய சினிமாவின் மிகச்சிறந்த கூஸ்பம்ப்ஸ் காட்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. சிறந்த முதல் பாதிக்கு பின் இரண்டாம் பாதி இன்னும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மொத்தமாக ஏமாற்றம் தான். 

- Advertisement -

திரைக்கதையை வேறு எங்கோ மாற்றி செல்கிறார் இயக்குநர் சந்தீப் ரெட்டி. இதனால் படமும் தொங்கலில் விழுகிறது. ரன்பீர் – பாபி டியோல் இடையிலான சண்டை காட்சி காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனாவை பொறுத்தவரை காதல் காட்சிகளில் மிளர்கிறார். மற்றபடி அவர் தென்னிந்திய ரசிகர்களுக்காக கொண்டு வரப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

- Advertisement -

ராக்ஸ்டார் படத்திற்கு பின் ரன்பீர் கபூர் முதல்முறையாக உருப்படியாக நடித்துள்ளார் என்று சொல்லலாம். எந்த மைக், பாடல் என்று எடுக்காமல், கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். மொத்தமாக அனிமல் படத்தின் முதல் பாதி சிறப்பாகவும், இரண்டாம் பாதி மோசமாகவும் அமைந்திருப்பதால், ஆவரேஜ் படமாக வந்துள்ளது. 

இதனால் தமிழ்நாட்டில் பெரியளவில் படத்தை கண்டுகொள்ள வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. மேலும் இறுதிக்காட்சியில் வரும் ரன்பீர் கபூர், விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறது. மேலும் 3.30 மணி நேரம் படமென்பதால், ஆங்காங்கே ஏராளமான தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு சிக்கலாக உள்ளது.

Most Popular