Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeEntertainmentகாதலர் தினத்தை குறி வைத்த கவின்..  இளைஞர்களை கவர களமிறங்கும் ”ஸ்டார்”.. கடைசி நேரத்தில் இணைந்த...

காதலர் தினத்தை குறி வைத்த கவின்..  இளைஞர்களை கவர களமிறங்கும் ”ஸ்டார்”.. கடைசி நேரத்தில் இணைந்த பாலிவுட் நடிகை

லிஃப்ட், டாடா ஆகிய படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் நடிகர் கவின் மார்க்கெட் அடுத்தக்கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. டாடா படம் சின்ன பட்ஜெட் என்றாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்குகளிலேயே நல்ல லாபத்தை கொடுத்த டாடா படம், ஓடிடி மற்றும் டெலிவிஷன் உரிமை விற்பனையில் பெரிய லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்துள்ளது.

- Advertisement -

இதனால் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார் நடிகர் கவின். இந்த நிலையில் பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே இந்த நடிகர் ஹரீஷ் கல்யாணை வைத்து படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

ஆனால் இடையிலேயே படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டதால், பின்னர் நடிகர் கவினை வைத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் 2 நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். முதல் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அதிதி பொஹோங்கர் இருவரும் நடித்து முடித்துள்ளனர்.

- Advertisement -

இதில் அதிதி பொஹோங்கர் “She” இணைய தொடரில் அதிகளவிலான கிளாமர் காட்சிகளில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர். இந்த நிலையில் ஸ்டார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனால் அடுத்தடுத்து ரிலீஸ் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் ஸ்டார் திரைப்படம் யூத் ஆடியன்ஸை மையப்படுத்திய கதை என்பதால், அவர்களை கவரும் வகையில் பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி மாதம் முதல் டீசர், ட்ரெய்லர், இசை என்று அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி விளம்பரப் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

Most Popular