Tuesday, May 7, 2024
- Advertisement -
HomeEntertainmentதமிழ் சினிமாவில் முதல் முறை.. சித்தப்பாக்களின் அன்பை காட்டவுள்ள சித்தார்த்… பண்ணையாரும் பத்மினியும் இயக்குனரின் அடுத்த...

தமிழ் சினிமாவில் முதல் முறை.. சித்தப்பாக்களின் அன்பை காட்டவுள்ள சித்தார்த்… பண்ணையாரும் பத்மினியும் இயக்குனரின் அடுத்த படம்!

2014 ஆம் ஆண்டு வெளியான பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரானார் இயக்குனர் S.U.அருண்குமார். தனது 9 நிமிடக் குறும்படத்தினை நேர்த்தியாகத் திரைப்படமாக்கி பலரது பாராட்டையும் பெற்றார் அருண் குமார். `பார்க்க பொடியனாட்டம் இருக்கும் இந்தப் பையனா எடுத்தது’ என்று பலரும் ஆச்சர்யப்பட்டனர்.

- Advertisement -

வில்லன் பாத்திரம் இல்லாமல், புகை, மது, போதை போன்ற சமாசாரங்களைத் தவிர்த்து பண்ணையாரும் பத்மினியும் படத்தை தனித்துவமாக திரைக்கதை அமைத்து சபாஷ் போட வைத்தார் இயக்குனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த சேதுபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

படத்தில் விஜய் சேதுபதி கம்பீரமான காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். தமிழில் வெற்றிபெற்ற சேதுபதி திரைப்படம் தெலுங்கில் ஜெயதேவ் என ரீமேக் செய்யப்பட்டது. கடைசியாக இயக்குனர் S.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த சிந்துபாத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

- Advertisement -

இதனிடையே ஷங்கர் இயக்கத்தில் உருவான ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் S.U.அருண்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகவுள்ள இத்திரைப்படத்திற்கு சித்தா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அறிமுகம் செய்யும் வகையில் புதிய போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இத்திரைப்படம் குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்தா படம் குறித்து பேசிய இயக்குனர் அருண்குமார்,
தமிழ் சினிமாவில் தாய் மாமா உறவுமுறையில் பாசமலர் முதல் கீழ்ச் சீமையிலே மற்றும் இன்னும் பல படங்கள் வந்திருக்கின்றன.

ஆனால் சித்தப்பா உறவை இதுவரை பல படங்கள் பதிவு செய்யவில்லை. இந்த படம் அதைச் செய்யும் எனக் கூறியுள்ளார்.இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ’கனா’ உள்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular