உலக சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் யாருமே எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட படம் ஒன்று ஆஸ்கர் விருதை வாங்கி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.
ஆம் netflixல் கடந்த ஆண்டு வெளியான இந்த எலிபன்ட் விஸ்பர்ஸ் என்ற டாக்குமென்டரி யாருமே எதிர்பாராத வகையில் ஆஸ்கர் விருதை வாங்கி அசத்தியிருக்கிறது.இந்த திரைப்படம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாக்குமெண்டரி ஆகும்.
இதில் தம்பதி பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோர் யானைகளை எப்படி தங்களது குடும்ப உறுப்பினராக கருதி அதனை வளர்க்கின்றனர் என்பதை உயிரோட்டத்துடன் சொல்லும் கதை ஆகும்.
இதில் முதுமலை காட்டின் இயற்கை அழகையும் இந்த டாக்குமென்ட்ரி பதிவு செய்திருக்கிறது. இது netflix இல் ஒளிபரப்பாகிறது என்று ஆஸ்கர் விருது வாங்கிய பிறகு தான் பல ரசிகர்களுக்கு தெரியும் என்பது சோகமான விஷயம். உணர்ச்சி பூர்வமாக இந்த டாக்குமென்ட்ரி இருப்பதால் எவ்வித விளம்பரமும் இன்றி ஆஸ்கார் விருதை தட்டி தூக்கியது.
இதில் சிறப்பம்சமே இந்த டாக்குமென்டரி தமிழ்நாட்டிலும் தமிழிலும் பேசி எடுக்கப்பட்டதாகும். இந்த டாக்குமெண்டரியை கார்த்திக்கி கோன்சால் என்ற இயக்குனர் தான் எடுத்துள்ளார். விருது அறிவிக்கும் போது அந்த மேடையை இந்தியர்களால் நிறைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதேபோன்று ட்ரிபிள் ஆர் படத்தின் நாட்டு கூத்து பாடலும் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றதால் இரண்டு இந்திய படைப்புகள் ஆஸ்கரில் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. தி எலிபன்ட் விஸ்பர் டாக்குமென்டரி மூலம் இன்னும் நிறைய விஷயங்கள் இந்தியாவிலிருந்து வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
ஆஸ்கர் விருதுகள் போல் இந்தியாவிலும் இதுபோன்ற டாக்குமெண்டரி இயக்குனர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்