Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeEntertainmentவெறும் 8 நாள்தான்.. சூர்யாவை தட்டித்தூக்கிய தளபதி.. இன்ஸ்டாகிராமில் கூட ஆதிக்கம் செலுத்தும் விஜய் ரசிகர்கள்!

வெறும் 8 நாள்தான்.. சூர்யாவை தட்டித்தூக்கிய தளபதி.. இன்ஸ்டாகிராமில் கூட ஆதிக்கம் செலுத்தும் விஜய் ரசிகர்கள்!

இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய சில நாட்களிலேயே நடிகர் விஜய் பல மில்லியன் ஃபாலேயஸ்களை குவித்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகர் சூர்யா இதுவரை வைத்திருந்த வெறும் 8 நாட்களிலேயே தட்டித்தூக்கியுள்ளார்.

- Advertisement -

நடிகர் விஜய் திடீரென அதிரடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே லட்சத்தை தாண்டி ஃபாலோயர்ஸை குவிந்தனர்.

இந்த கணக்கை அவரது அட்மின் நிர்வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தையும் அவரது மேனேஜர் ஜெகதீஷ் நிர்வகித்து வருகிறார். இதனை வாரிசு இசை வெளியீட்டு விழாவிலேயே விஜய் அறிவித்திருந்தார்.

- Advertisement -

நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்தது முதல் அவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் குவியத்தொடங்கினர். இதிலும் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார் விஜய்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் வெறும் 8 நாட்களில் மட்டும் 6.6 மில்லியன் ஃபாலேயஸ்களை பெற்றுள்ளார். நடிகர் சூர்யாவின் ஃபாலோயர்கள் எண்ணிக்கையும் இதுதான். இதனால் குறுகிய நாட்களில் மற்ற நடிகர்களைவிட விஜய் இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவி வருகிறார் என அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.

Most Popular