Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentசிங்கம் களம் இறங்கிருச்சே… சென்னைக்கு திரும்பிய தளபதி… அப்புறம் என்ன, அடுத்து லியோ இசை வெளியீட்டு...

சிங்கம் களம் இறங்கிருச்சே… சென்னைக்கு திரும்பிய தளபதி… அப்புறம் என்ன, அடுத்து லியோ இசை வெளியீட்டு விழாதான் போங்க…

தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக விஜய் உடன் இணைந்து இருக்கிறார். காஷ்மீர், சென்னை, தலக்கோணம் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. லியோவிற்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதற்கு மிக்க முக்கிய காரணம் எல் சி யு கான்செப்ட் தான்.

- Advertisement -

தனது முந்தைய திரைப்படமான விக்ரமில் எல் சி யு வை அறிமுகப்படுத்திய லோகேஷ், அதன் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், பலரும் லியோவில் அது இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், விக்ரம் படத்தில் நடித்த சில கதாபாத்திரங்கள் லியோவில் இடம் பெற்றிருப்பதாக அரசல் புரசலாக பேசப்பட்டது.

இதற்கு அதற்கு மாதம் 19 ஆம் தேதி விடை தெரிந்து விடும். கிட்டத்தட்ட படத்திற்கான வேலைகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதால், லியோவின் ப்ரொமோஷனுக்கான பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே சூட்டிங் தொடங்கியது முதல், காஷ்மீரில் பணிகள் நடைபெற்றதற்கான வீடியோ, நா ரெடி தான் பாடல், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுனின் கதாபாத்திரங்கள் அறிமுகம் என அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்து உற்சாகப்படுத்தினார் தயாரிப்பாளர் லலித் குமார்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் வாரங்களில் லியோ படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும். இசை வெளியீட்டு விழா தமிழ்நாட்டில் தான் நடைபெறும் என தெரிவித்திருந்தார். லியோவின் இரண்டாம் பாடல், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 18ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த மாதத்தின் இறுதியிலும் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இப்படி, படத்தின் பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில் நடிகர் விஜய்யும் சென்னை திரும்பி இருக்கிறார்.

- Advertisement -

வெங்கட் பிரபுவுடன் இணையும் அடுத்த படத்திற்காக, அமெரிக்கா சென்ற அவர் அதன் பணிகளை முடித்து திரும்பி உள்ளார். அவர் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரோமோஷன் வேலைகளுக்காக தான் வந்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. விரைவில் லியோவின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular