Wednesday, May 8, 2024
- Advertisement -
HomeEntertainmentஇதெல்லாம் தேவையா.. ரஜினி ஒழிக கோஷம்.. விஜய் ரசிகரை அடித்து ஓடவிட்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

இதெல்லாம் தேவையா.. ரஜினி ஒழிக கோஷம்.. விஜய் ரசிகரை அடித்து ஓடவிட்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி திரைப்படம் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு வழங்கப்பட்டு வருகிறது. படத்திற்கு சிறப்புக் காட்சி இல்லை என்றும், காலை 9 மணிக்குதான் படம் வெளியாகியது.

- Advertisement -

இருப்பினும் முன்பதிவில் வேறு எந்த படங்களும் செய்யாத சாதனையை ஜெயிலர் புரிந்தது. தமிழ்நாட்டில் மட்டும் முன்பதிவுக்கு மட்டுமே சுமார் 27 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஒட்டு மொத்தமாக 900 திரையரங்குகளில் ஜெயிலர் படம் வெளியாகிறது. இதற்கு முன் வேறு எந்த திரைப்படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியானது இல்லை.

ஜெயிலர் படத்தின் விமர்சனங்கள் பாசிட்டிவாக இருக்க திரையரங்குகளில் ரஜினிகாந்த் ரசிகர்கள் திருவிழாவை போல் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் தலைவரு நிரந்தரம் என்று ட்ரெண்டு செய்து வருகின்றனர். தர்பார், அண்ணாத்த படங்களில் தோல்வியால் துவண்டு போன ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு, ஜெயிலர் புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் ரஜினிகாந்த் – விஜய் ரசிகர்களின் மோதல், ஜெயிலர் ரிலீஸான இன்றைய தினம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் ஜெயிலர் படம் ரிலீஸாகியுள்ளது. இதனை பார்க்க ரஜினி ரசிகர்கள் படை போல் திரண்டனர். அப்போது ரஜினிகாந்த் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க என்று கோஷம் எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

அப்போது திரையரங்கில் இருந்த விஜய் ரசிகர் ஒருவர் ரஜினிகாந்த் ஒழிக என்று கோஷம் எழுப்பியுள்ளார். இவர் கண்டுபிடித்து ரஜினிகாந்த் ரசிகர்கள் ஓட ஓட துரத்தி துரத்தி அடித்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Most Popular