Entertainment

“ஜஸ்ட் மிஸ்” நூலிழையில் உயிர்தப்பிய விஷால்.. மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் பயங்கர விபத்து!

விஷால் நடித்த லத்தி படம் அண்மையில் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. விஷால் கான்ஸ்டபிளாக நடித்த இப்படத்தில் சுனைனா பல ஆண்டுகளுக்கு பின் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியப்படமாக இப்படம் வெளியானது. லத்தி திரைப்படத்தைத் தொடர்ந்து விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷாலின் பிறந்த நாள் அன்று வெளியானது. அந்த போஸ்டரில் தாடி, மீசையுடன் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வேறமாதிரி இருந்தார் விஷால். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ரித்துவர்மா கதா நாயகியாகவும், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு படத்தொகுப்பு பணிகளை விஜய் வேனுக்குட்டு கவனித்து வருகின்றனர்.

Advertisement

மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்த போது, படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த லைட் வாகனம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தின் அருகே அதிவேகமாக பாய்ந்து வந்தது. இதனை கவனித்த படக்குழுவினர் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பதறியடித்து அங்கும் இங்கும் சிதறி ஓடினர். படப்பிடிப்பு தளத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் இருந்தனர்.

இதில் யாருக்கும் எந்தவித காயமும் இல்லாமல் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பயங்கரமான விபத்துதான், நல்ல வேளை யாருக்கும் எதுவும் ஆகவில்லை என கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விபத்து குறித்து எஸ்ஜே சூர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதலை பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த விபத்து குறித்து எஸ்ஜே சூர்யா கூறியபோது, ‘உண்மையில் கடவுளுக்கு தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

Advertisement

நூலிழையில் உயிர் தப்பினோம். திட்டமிட்டபடி அந்த லாரி நேராக வரவேண்டும், ஆனால் திசை மாறியதால் நாங்கள் உயிர் பிழைத்தோம். அவ்வாறு இல்லை என்றால் இந்நேரம் எங்களால் டுவிட் செய்திருக்க முடியாது, கடவுள் அருளால் தப்பினோம்’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதே போல இந்த விபத்து குறித்து பதிவிட்டுள்ள விஷால் ‘’ஒரு சில நொடிகள் மற்றும் ஒரு சில இன்ச் வித்தியாசத்தில் நாங்கள் தப்பித்தோம், கடவுளுக்கு நன்றி’ என்றும் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top